அரசாங்கத்தின் அழுத்தத்தால் எதிர்க்கட்சிகளின் குரலை டுவிட்டர் இனி ஒடுக்காது; ராகுல் காந்தி நம்பிக்கை

இந்தியாவில் ஆளும் அரசின் அழுத்தம் காரணமாக எதிர்க்கட்சிகளின் குரலை இனி டுவிட்டர் ஒடுக்காது என்ற நம்பிக்கை உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-28 15:39 GMT

புதுடெல்லி,

உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் மதிப்புக்கு வாங்கியுள்ளார். இதற்கான ஒப்பந்தம் நிறைவு பெற்ற நிலையில், நேற்று டுவிட்டர் நிறுவனம் முறைப்படி எலான் மஸ்க் வசம் சென்றது. டுவிட்டரில் பல்வேறு நடவடிக்கைகளை மேம்படுத்த உள்ளதாகவும் அனைத்து தரப்பினருக்குமான களமாக டுவிட்டரை நிலை நாட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக எலான் மஸ்க் கூறி வருகிறார்.

இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க்கிற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி இது தொடர்பாக தனது டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:- வாழ்த்துக்கள் எலான் மஸ்க். வெறுப்பு பேச்சுக்களுக்கு எதிராகவும் உண்மையை இன்னும் வலுவாக சரிபார்க்கும் நடவடிக்கைகளில் டுவிட்டர் இனிமேல் ஈடுபடும் என்று நம்பிக்கை உள்ளது. இந்தியாவில் ஆளும் அரசின் அழுத்தம் காரணமாக எதிர்க்கட்சிகளின் குரலை இனி ஒடுக்காது என்ற நம்பிக்கையும் உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்