உருட்டு கட்டையால் தாக்கி மூதாட்டி கொலை

உருட்டு கட்டையால் தாக்கி மூதாட்டி கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-10-16 18:45 GMT

பெங்களூரு: பெங்களூரு சர்ஜாப்புரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கோடே ரோடு பகுதியில் வசித்து வந்தவர் முனியம்மா(வயது 75). இவர், காய்கறி வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு வியாபாரத்திற்கு சென்று விட்டு வீட்டில் படுத்து முனியம்மா தூங்கினார். நேற்று அதிகாலையில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், தூங்கி கொண்டு இருந்த முனியம்மாவை உருட்டு கட்டையால் தாக்கினார்கள். இதில் பலத்தகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

உடனே அங்கிருந்து மர்மநபர்கள் ஓடிவிட்டார்கள். நேற்று காலையில் முனியம்மா கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு, அவரது வளர்ப்பு மகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்ததும் சர்ஜாப்புரா போலீசார் விரைந்து வந்து முனியம்மாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது வீட்டில் இருந்த நகை, பணம் எதுவும் கொள்ளை போகவில்லை என்று தெரிந்தது. இதுகுறித்து சர்ஜாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்