இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது

சிகாரிப்புராவில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கல்லூரி மாணவர்கள் 2 பேரை கைது செய்தனர்.

Update: 2023-05-01 18:45 GMT

சிவமொக்கா-

சிகாரிப்புராவில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கல்லூரி மாணவர்கள் 2 பேரை கைது செய்தனர்.

பெற்றோர் மறுப்பு

சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புராவை சேர்ந்தவர் சுகேல். இவருடைய நண்பர் சாகிப். இவர்கள் 2 பேரும் அந்தப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்கள். இந்தநிலையில் சிகாரிப்புரா பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கணினி பயிற்சிக்கு சென்று வந்தார். அப்போது சுகேலுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இ்ந்த நிலையில் 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர். அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்தநிலையில் 2 பேரும் காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீ்ட்டிற்கு தெரியவந்தது.

2 பேரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இளம்பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இளம்பெண் சுகேலுடனான காதலை முறித்து கொண்டதாக தெரிகிறது. இதனால் சுகேல் அதிருப்தி அடைந்தார். இந்தநிலையில் சாகிப், இளம்பெண்ணை தொடர்புகொண்டு சுகேல், உன்னிடம் பேச வேண்டும் என்று கூறுவதாக அழைத்துள்ளார்.

2 பேர் கைது

அதனை நம்பிய இளம்பெண் சாகிப்புடன் ஜீப்பில் சிராளகொப்பா பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த சுகேல் மற்றும் சாகிப் 2 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்்த இளம்பெண் அவர்களிடம் இருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுது உள்ளார். இதையடுத்து இளம்பெண்ணின் பெற்றோர் சிராளகொப்பா போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிராளகொப்பா பகுதியில் பதுங்கி இருந்த சுகேல், சாகிப் ஆகிய 2 ேபரை கைது செய்தனர். இதுகுறித்து சிராளகொப்பா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்