முலாயம் சிங் உயிருடன் இருந்திருந்தால் ராமர் கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பார்: மருமகள் அபர்ணா யாதவ்

ராமர் கோவில் குறித்தான எதிர்க்கட்சியினரின் எண்ணம் சிறுமைத்தனமாக உள்ளதாக அபர்ணா யாதவ் தெரிவித்துள்ளார்.;

Update:2024-01-19 05:02 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சி நிறுவனருமானவர் முலாயம்சிங் யாதவ். கடந்த 2022-ம் ஆண்டு முலாயம்சிங் இறந்துபோனார். இவருடைய மகன் அகிலேஷ் யாதவ் கட்சி பொறுப்புகளை தலைமையேற்று நிர்வகித்து வருகிறார். முலாயம் சிங்கின் மற்றொரு மகனான பிரதீக்கின் மனைவி அபர்ணா பா.ஜனதா தலைவராக இருக்கிறார்.

இந்தநிலையில் செய்தியாளர்களிடம் அபர்ணா பேசியதாவது, "ராமர் கோவில் குறித்தான எதிர்க்கட்சியினரின் எண்ணம் சிறுமைத்தனமாக உள்ளது. ராமர் கோவில் எந்த கட்சியையும் சார்ந்தது அல்ல. ஒருவரால் கட்டப்பட்டதும் அல்ல. பலரின் நம்பிக்கையில் இந்த கோவில் உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.

மேலும், "முலாயம் சிங் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயமாக ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு சென்றிருப்பார்" என்றார்.

கோவில் நிர்வாகத்தினரின் அழைப்பை ஏற்று, கோவில் கும்பாபிஷேகத்திற்கு குடும்பத்துடன் செல்வதாக அகிலேஷ் யாதவ் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்