குஜராத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த நபர் திடீரென மாரடைப்பால் உயிரிழப்பு

குஜராத்தில் 45 வயது நபர் ஒருவர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-03-19 17:18 GMT

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 45 வயது நபர் ஒருவர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயூர் என்ற 45 வயது நபர் இன்று தனது நண்பர்களுடன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு சிறிது பதற்றம் ஏற்பட்டது. தரையில் உட்கார்ந்த அவர், திடீரென சரிந்து விழுந்தார்.

இதையடுத்து அவரது நண்பர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்தார். மயூர் ஒரு பொற்கொல்லர். அவருக்கு எந்த விதமான போதை பழக்கமும் இல்லை என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

குஜராத்தில் கடந்த ஒன்றரை மாதங்களில் இது எட்டாவது சம்பவம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்