நாட்டை விட்டு வெளியேறும் பணக்காரர்களுக்கு வரிச்சலுகையா? - சுதேசி அமைப்பு கேள்வி

நாட்டை விட்டு வெளியேறும் பணக்காரர்களுக்கு வரிச்சலுகையா? என்று சுதேசி அமைப்பு கேள்வி எழுப்பி உள்ளது.

Update: 2023-02-02 19:04 GMT

புதுடெல்லி,

அரசியல், கலாசார இயக்கமான சுதேசி ஜாகரன் மஞ்சின் இணை ஒருங்கிணைப்பாளர் அஷ்வனி மகாஜன், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அவர், நாட்டை விட்டு வெளியேறுகிற பெரும்பணக்காரர்களின் பாஸ்போர்ட்டுகளை ரத்து செய்யாமல், அவர்களுக்கு வரி குறைப்பு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, "பெரும்பணக்காரர்கள் பலரும் பல்வேறு காரணங்களால் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். இங்கு வரி விகிதம் அதிகம் என்பதால் வேறு நாட்டில் வேலை செய்யப் போகிறோம் என்று கூறிக்கொண்டு செல்கிறார்கள். அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க வரிச்சலுகை தர அரசு முன்மொழிந்துள்ளது. நான் நிதி மந்திரியாக இருந்தால், முதலில் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை நிறுத்த வேண்டும், அவர்களின் பாஸ்போர்டடுகளை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமரிடம் கூறி இருப்பேன்" என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்