ஏரியில் மூழ்கிய 2 பெண்களை காப்பாற்றிய அரசு பஸ் டிரைவர்

துமகூருவில் ரோட்டில் செல்லும்போது உயிருக்கு போராடியதை கவனித்த அரசு பஸ் டிரைவர் துரிதமாக செயல்பட்டு 2 பெண்களை காப்பாற்றினார்.

Update: 2023-01-29 20:24 GMT

பெங்களூரு:-

ஏரியில் குதித்தார்

துமகூரு மாவட்டம் சிராவில் இருந்து நாகப்பனஹள்ளி கேட் பகுதிக்கு நேற்று ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் ஹந்திகுன்டே என்ற பகுதியில் வரும்போது, ரோட்டோரம் இருந்த ஏரியில் 2 பெண்கள் மூழ்கியபடி உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதை கண்ட அந்த பஸ்சின் டிரைவர் உடனே துரிதமாக செயல்பட்டு பஸ்சை ரோட்டோரம் நிறுத்திவிட்டு மின்னல் வேகத்தில் சென்று ஏரியில் சீருடையுடன் குதித்தார்.

உயிருக்கு போராடிய 2 பெண்களையும் அவர் மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். பஸ்சில் இருந்து பயணிகள் ஒன்று சேர்ந்து அவர்கள் வயிற்றில் இருந்த நீரை அழுத்தி வெளியேற்றினர். இருவரும் தற்போது நலமாக உள்ளனர். உரிய நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு 2 பெண்களின் உயிரை காப்பாற்றிய டிரைவரை கர்நாடக அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் (கே.எஸ்.ஆர்.டி.சி.) அன்புக்குமார் வெகுவாக பாராட்டியுள்ளார்.

பெருமை கொள்கிறோம்

இதுகுறித்து அவர் கூறுகையில், "எங்கள் அரசு பஸ்சின் டிரைவர், துரிதமாக செயல்பட்டு செயல்பட்டு ஏரியில் மூழ்கிய 2 பெண்களை மீட்டு காப்பாற்றியுள்ளார். இதை வெகுவாக பாராட்டுகிறேன். டிரைவரின் இந்த செயலை கண்டு பெருமை கொள்கிறோம். இத்தகைய ஊழியர்களே எங்கள் நிறுவனத்தின் சொத்து" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்