தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி உடல் மீட்பு - கற்பழித்து கொல்லப்பட்டதாக புகார்
காணாமல் போன சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் கன்னாஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர், 14 வயது சிறுமி. இவர் கடந்த புதன்கிழமை ஹோலி தினத்தன்று காலையில் காணாமல் போனார்.
இந்நிலையில் அந்த கிராமத்துக்கு வெளியே உள்ள ஒரு மரத்தில், தனது துப்பட்டாவில் தூக்கில் தொங்கிய நிலையில் அச்சிறுமியின் உடல் நேற்று முன்தினம் மீட்கப்பட்டது. கால்நடைகளுக்கு புல் அறுக்கச் சென்ற அவரை யாரோ கடத்தி, கற்பழித்து, கொலை செய்துவிட்டனர். தற்கொலை போல தோன்றுவதற்காக அவரை மரத்தில் தொங்கவிட்டிருக்கின்றனர் என சிறுமியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
அதுகுறித்து விசாரிக்கப்படும் என்றும், சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே ஒருவரை பிடித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.