பெங்களூர் சென்ற தனியார் விமானத்தில் திடீர் தீவிபத்து ..? டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கம்

விமானத்தில் தீவிபத்து ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில் டெல்லி விமான நிலையத்தில் முழு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-28 17:32 GMT

புதுடெல்லி,

இண்டிகோ விமானம் 6இ-2131 (டெல்லியில் இருந்து பெங்களூர்) விமானத்தில் தீப்பொறி ஏற்பட்டதாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் டெல்லி ஐஜிஐயின் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் தீவிபத்து ஏற்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் டெல்லி விமான நிலையத்தில் முழு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக விமானம் புறப்படும் போது என்ஜினில் தீப்பிடித்ததாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றும் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்