பயங்கரவாதிகள் ஊடுருவல் பெரிய அளவில் இல்லை: ராணுவம் தகவல்
பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கும் பாகிஸ்தானின் முயற்சிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜம்மு,
ராணுவ அதிகாரி மஞ்சிந்தர் சிங் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
2012 முதல் இன்று வரை, ஜம்முவில் வன்முறை அளவு குறைவாகவே உள்ளது. பாகிஸ்தான் ஊடுருவல், பயங்கரவாதம், வெடிமருந்துகள் மற்றும் போதைப் பொருட்களை பரப்ப முயற்சிக்கிறது. எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் பெருமளவில் இல்லை. இந்திய ராணுவத்தின் கடும் நடவடிக்கைகளால் பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கும் பாகிஸ்தானின் முயற்சிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.