பான்கார்டு பதிவேற்ற கோரி முதியவரிடம் ரூ.2.21 லட்சம் மோசடி

பான்கார்டு பதிவேற்ற கோரி முதியவரிடம் ரூ.2.21 லட்சம் மோசடி நடந்துள்ளது.

Update: 2022-09-30 21:46 GMT

பெங்களூரு: பெங்களூரு ரிச்மவுண்ட் டவுன் பகுதியை சேர்ந்தவர் பால் ரோசாரியோ (வயது 83). இவரது செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் வங்கி கணக்குடன் பான் கார்டுவை பதிவேற்றும்படி கூறப்பட்டு இருந்தது. இதனை நம்பிய அவர் குறுந்தகவலில் வந்த லிங்கை கிளிக் செய்து பான் கார்டு பற்றிய தகவல்களை தெரிவித்தார். அப்போது தனது செல்போனுக்கு வந்த ஓ.டி.பி. எண்ணையும் அந்த லிங்கில் பதிவு செய்தார். அவ்வாறு பதிவு செய்த சில நிமிடத்திலேயே பால் வங்கி கணக்கில் இருந்த ரூ.2.21 லட்சம் எடுக்கப்பட்டது. அப்போது தான் அவருக்கு பான் கார்டுவை பதிவேற்றும்படி கூறி குறுந்தகவல் அனுப்பி மர்மநபர்கள் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

இதுபோல் அசோக்நகர் பகுதியில் கல்யாணியிடம் தனியார் நிறுவனத்தில் வேலை கொடுப்பதாக கூறி நம்பவைத்து ரூ.1.17 லட்சத்தை பெற்று மர்மநபர்கள் மோசடி செய்துவிட்டனர். இதுகுறித்து மத்திய மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்