மந்திரி பிரியங்க் கார்கே பெயரில் மோசடி

வாரிய தலைவர் பதவியை வாங்கி தருவதாக கூறி மந்திரி பிரியங்க் கார்கே பெயரில் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-06-01 18:45 GMT

பெங்களூரு:-

காங்கிரஸ் ஆட்சியில் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரியாக பிரியங்க் கார்கே இருந்து வருகிறார். இந்த நிலையில், அவரது பெயரை பயன்படுத்தி, காங்கிரஸ் பிரமுகர்களிடம் பணம் பறிக்கும் முயற்சி நடந்துள்ளது. அதாவது தாசரஹள்ளியில் காங்கிரஸ் பிரமுகராக இருக்கும் கீதா சிவராமை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ஒரு நபர், தான் மந்திரி பிரியங்க் கார்கேவிடம் உதவியாளராக இருப்பதாகவும், உங்களுக்கு வாரிய தலைவர் பதவி பெற்றுக் கொடுப்பதாகவும், இதற்காக பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த அவர், இதுபற்றி சதாசிவநகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவருக்கு வந்த செல்போன் எண் மூலம் விசாரித்தனர். அப்போது மைசூருவை சேர்ந்த ரகுநாத் என்பவர் மந்திரி பிரியங்க் கார்கேவின் உதவியாளர் எனக்கூறி பேசியது தெரியவந்தது. இதையடுத்து, ரகுநாத் கைது செய்யப்பட்டார். அவர், தற்போது துமகூருவில் வசித்து வந்துள்ளார். மந்திரி பிரியங்க் கார்கேவின் பெயரை பயன்படுத்தி, காங்கிரஸ் பிரமுகர்களிடம் வாரிய தலைவர் பதவி பெற்றுக் கொடுப்பதாக கூறி பணம் பறிக்க முயற்சித்தது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்