அரசு வழக்கறிஞர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த பெண் வழக்கறிஞர்

அரசு வழக்கறிஞர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.

Update: 2022-10-03 15:45 GMT

சண்டிகர்

அரியானா மாநிலம் குருகிராம் மாவட்ட கோர்ட்டில் அரசு துணை வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் ஹிமன்ஷூ. இவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக பெண் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அந்த பெண் வழக்கறிஞர் சாடர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், கடந்த 11-ம் தேதி வழக்கு தொடர்பாக ஒரு நபரை சந்திக்க வேண்டுமென கூறி செக்டார் 15 பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு ஹிமன்ஹூ என்னை அழைத்து சென்றார். அந்த ஓட்டலில் உள்ள ஒரு அறையில் இருந்தபோது ஹிமன்ஹூ எனக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தார்.

அதை குடித்த சிறிது நேரத்தில் நான் மயங்கிவிட்டேன். மயக்கம் தெளிந்து கண் விழித்தபோது நான் அரை நிர்வாணத்தில் இருந்தேன். ஹிமன்ஹூ என்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்பதை நான் அறிந்துகொண்டேன். பின்னர், நான் அவருடன் சண்டையிட்டேன். ஆனால், இது குறித்து போலீசில் புகார் அளித்தால் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை வீடியோவாக எடுத்துவைத்துள்ளதாகவும், அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டுவிடுவேன்' என்று ஹிமன்ஹூ மிரட்டியதாகவும் பாதிக்கபட்ட பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் சூழ்நிலையில், இந்த புகாருக்கு முன்னதாக அந்த பெண் மீது ஹிமன்ஹூ போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த பெண் வழக்கறிஞர் மீது ஹிமன்ஹூ அளித்த புகாரில், தன்னை தோழியாக ஏற்றுக்கொள்ளும்படி அந்த பெண் தொடர்ந்து தன்னை தொந்தரவு செய்து வந்தாதாகவும், அந்த நட்பை ஏற்க மறுத்ததால் தன் மீது போலியாக பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்வேன் என்று மிரட்டல் விடுத்ததாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்தார்.

இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்த நிலையில் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்