டெல்லியில் பலத்த மழை காரணமாக விமான சேவை பாதிப்பு

சீரற்ற வானிலை காரணமாக டெல்லிக்கு வர வேண்டிய பல விமானங்கள் வேறு இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

Update: 2022-05-23 19:11 GMT

image credit: ndtv.com

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில், கடந்த சில நாட்களாக வெப்பம் மக்களை வாட்டி வந்த நிலையில், இன்று நகரின் பல்வேறு பகுதிகளில் நேறு மழை பெய்தது. இதன் காரணமாக அங்கு வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது.

இடியுடன் கூடிய மழையின் காரணமாக பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. நகரின் சில பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மேலும், பலத்த காற்றின் காரணமாக நகரின் 44 இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

இந்த சூழலில், இரவுமுதல் மீண்டும் டெல்லியில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. வானிலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பலத்த காற்றுடன் (50-60 கிமீ) இடியுடன் கூடிய மழை பெய்வதால், அங்கு விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சில விமானங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு புறப்பட முடியாமல், தாமதமாக புறப்பட்டு சென்றன. சீரற்ற வானிலை காரணமாக டெல்லிக்கு வர வேண்டிய பல விமானங்கள் வேறு இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

விஸ்தாரா, ஸ்பைஸ்ஜெட், ஏர் இந்தியா ஆகிய நிறுவனங்களும் சீரற்ற வானிலை காரணமாக டெல்லி விமான சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.

 

Tags:    

மேலும் செய்திகள்