பெங்களூரு-டெல்லி இடையே ஆகாச ஏர் விமான சேவை
பெங்களூரு - டெல்லி இடையே ஆகாச ஏர் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து தனியார் விமான நிறுவனங்கள், டெல்லி, மும்பை உள்பட பல பகுதிகளுக்கு விமான சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில் விமான போக்குவரத்து துறையில் புதிதாக ஆகாச ஏர் என்ற விமான நிறுவனம் களம் இறங்கி உள்ளது. இந்த நிறுவனம் பெங்களூருவில் இருந்து டெல்லி, அகமதாபாத் இடையே தனது விமான சேவையை தொடங்க உள்ளது. அதன்படி அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந் தேதி பிற்பகர் 2.25 மணிக்கு பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தை விமானம் வந்தடையும். இதையடுத்து அந்த விமானம் பிற்பகல் 3.45 மணிக்கு டெல்லிக்கு புறப்படும். அன்றைய தினம் அகமதாபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தை இயக்கவும் இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.