இந்தியாவிலே முதல் முறை...! 21 கிலோ மீட்டர் - லடாக்கில் உறை பனி ஏரி மாரத்தான்...

கடல் மட்டத்தில் இருந்து 13,862 அடி உயரத்தில் நடைபெறவுள்ள இந்த உறைபனி மராத்தானின் மொத்த தூரம் 21 கிலோ மீட்டராகும்.

Update: 2023-02-14 14:20 GMT

லாடாக்,

இந்தியாவின் முதல் உறை பனி ஏரி மாரத்தான் போட்டி லாடாக்கில் நடைபெறவுள்ளது. லுகுங்கு என்ற பகுதியில் தொடங்கி மான் என்ற கிராமத்தில் இந்த மாரத்தான் நடைபெறவுள்ளது.

பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெறும் இந்த மாரத்தான் போட்டியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 75 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். கால நிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த மாரத்தான், இப்பகுதியின் சுற்றுலா வளர்ச்சிக்கும் உதவும் என்றும் கணிக்கப்படுகிறது.

கடல் மட்டத்தில் இருந்து 13,862 அடி உயரத்தில் நடைபெறவுள்ள இந்த உறைபனி மராத்தானின் மொத்த தூரம் 21 கிலோ மீட்டராகும். 

Tags:    

மேலும் செய்திகள்