வீடுகள் உள்பட 3 இடங்களில் தீ விபத்து
சித்ரதுர்காவில் வீடுகள் உள்பட 3 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
சிக்கமகளூரு:-
மின்கசிவு
சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரே தாலுகா தாரகட்டே கிராமத்தைச் சேர்ந்தவர் நாகப்பா. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென நாகப்பா வீட்டில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து ஒலல்ெகரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
பொருட்கள் சேதம்
இதேப்போல் அதேப்பகுதியை சேர்ந்த மஹானேதேஷ் வீட்டிலும் மின்கசிவின் காரணமாக தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் ஒலல்ெகரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டில் எரிந்த தீயை, தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பல் ஆனது. இந்த 2 தீ விபத்து குறித்து உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஒலல்கெரே போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
சித்ரதுர்கா மாவட்டம் சல்லகெரே டவுன் பகுதியில் வியாபாரிகள் பழக்கடை வைத்து வியாபாரம் ெசய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த பழக்கடைகளில் மின் கசிவால் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த வியாபாரிகள் தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீ அணைக்க முடியவில்ைல. இதையடுத்து சல்லகெரே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த விபத்தில் 7 பழக்கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சல்லகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.