டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து
டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள மாநில காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு எதிரில் வருமானவரித்துறை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் வழக்கமான பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் திடீரென இந்த கட்டிடத்தின் 4வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 21 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி தீயை தற்போது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்ற போதும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.