ஹனிடிராப் முறையில் வாலிபரை மிரட்டி பணம் பறித்து தலைமறைவாக இருந்த இளம்பெண் கைது

பெங்களூருவில் ஹனிடிராப் முறையில் வாலிபரை மிரட்டி பணம் பறித்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2022-11-06 18:45 GMT

பெங்களூரு: பெங்களூருவில் ஹனிடிராப் முறையில் வாலிபரை மிரட்டி பணம் பறித்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

வீடியோ எடுத்து மிரட்டல்

பெங்களூரு நகரில் வசித்து வருபவர் திலீப். இவருக்கு, சமூக வலைதளம் மூலமாக பி.டி.எம். லே-அவுட்டை சேர்ந்த பிரியா என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த மாதம் (அக்டோபர்) 27-ந் தேதி பி.டி.எம். லே-அவுட், 1-வது ஸ்டேஜில் உள்ள பிரியாவின் வீட்டுக்கு திலீப் சென்றார். அங்கு வைத்து பிரியா மற்றும் அவரது நண்பர்கள் திலீப்பை ஆபாசமாக வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க பணம் கொடுக்கும்படியும் மிரட்டல் விடுத்துள்ளனர். அத்துடன் திலீப்பிடம் இருந்த ரூ.26 ஆயிரம், ஐ-போனையும், கார் சாவியையும் அவர்கள் பறித்து கொண்டனர். மேலும் கார் சாவி வேண்டும் என்றால் ரூ.60 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும் திலீப்புக்கு மிரட்டல் விடுத்து வந்தனர்.

இளம்பெண் கைது

இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த திலீப், சுத்தகுண்டே பாளையா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியா, அவரது நண்பர்களை தேடிவந்தனர். ஆனால் அவர்கள் தலைமறைவாகி விட்டனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த பிரியாவை சுத்தகுண்டே பாளையா போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து பணம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

திலீப்பிடம் ஏராளமான பணம் இருப்பதை அறிந்து கொண்ட பிரியா, தனது நண்பர்கள் 4 பேர் மூலமாக ஹனிடிராப் முறையில் வீடியோ எடுத்து மிரட்டியது தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள பிரியாவின் நண்பர்கள் 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்