மராட்டியத்தில் சரக்கு ரெயில் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதல் - பெரும் விபத்து தவிர்ப்பு

என்ஜின் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் எக்ஸ்பிரஸ் ரெயில் சரக்கு ரெயிலின் பின்புறமாக மோதி விபத்தை ஏற்படுத்தியது.

Update: 2022-08-18 00:48 GMT

மும்பை,

சத்தீஸ்கரில் இருந்து ராஜஸ்தான் நோக்கி பகத் கி கோதி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை 1.20 மணி அளவில் மராட்டிய மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள குட்மா மற்றும் கோண்டியா ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டு இருந்தபோது, அங்கு நின்று கொண்டு இருந்த சரக்கு ரெயில் மீது பயங்கரமாக மோதியது.

என்ஜின் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் சரக்கு ரெயிலின் பின்புறமாக மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஒரு பெட்டி தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது. இதில் சில பயணிகள் காயம் அடைந்தனர். இவர்களில் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

சரக்கு ரெயில் நின்று கொண்டு இருந்தபோது, அதே தண்டவாளத்தில் சென்று எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது. இந்த விபத்து குறித்து ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்