யங் இந்தியா அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை சீல்: காங்கிரஸ் கடும் கண்டனம்

நேஷனல் ஹெரால்டு கட்டிடத்தில் செயல்படும் யங் இந்தியா அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை சீல் வைத்ததற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2022-08-03 14:11 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

நேஷனல் ஹெரால்டு கட்டிடத்தில் செயல்படும் யங் இந்தியா அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அமலாக்கத்துறை அனுமதியின்றி அலுவலகத்தை திறக்கக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரது இல்லத்திற்கு முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் யங் இந்தியா அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை சீல் வைத்துள்ளதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் தனது டுவிட்டரில், "காங்கிரஸ் தலைமை அலுவலகம் மற்றும் 10 ஜன்பத்தை போலீஸ் முகாமாக மாற்றும் இன்றைய நடவடிக்கை அறிவிக்கப்படாத அவசரநிலை. நேஷனல் ஹெரால்டு (யங் இந்தியா) அலுவலகம் வலுக்கட்டாயமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் இந்த சர்வாதிகார அரசுக்கு எதிராக பொது மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் நிற்காவிட்டால், ஒட்டுமொத்த நாடும் அதன் பாதிப்பை சுமக்க வேண்டியிருக்கும்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்