காஷ்மீரில் என்கவுண்ட்டர்; 3-வது பயங்கரவாதி சுட்டு கொலை

காஷ்மீரில் ரெட்வானி பயீன் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் கடந்த செவ்வாய் கிழமை 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.;

Update:2024-05-09 05:43 IST

குல்காம்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் தெற்கே குல்காம் மாவட்டத்தில் ரெட்வானி பயீன் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். கடந்த செவ்வாய் கிழமை இதே பகுதியில் நடந்த என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று நடந்த சண்டையில் 3-வது பயங்கரவாதி கொல்லப்பட்டு உள்ளார். அந்த பயங்கரவாதியை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இதனை காஷ்மீர் போலீசார் எக்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த 4-ந்தேதி எல்லை கடந்து வந்த பயங்கரவாதி என சந்தேகிக்கப்படுபவர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய விமான படை அதிகாரி ஒருவர் பலியானார். 4 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து, காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தேடுதல் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்