தேர்தல் நடத்தை விதி மீறல் வழக்கு: ராஷ்ட்ரீய ஜனதாதள எம்.எல்.ஏ.வுக்கு 6 மாதம் சிறை பீகார் கோர்ட்டு உத்தரவு
பீகாரின் நவடா மாவட்டத்துக்கு உட்பட்ட ராஜாலி தொகுதி ராஷ்ட்ரீய ஜனதாதள எம்.எல்.ஏ. பிரகாஷ் வீர். கடந்த 2005-ம் ஆண்டு தேர்தலில் இவரது போஸ்டர்கள் ஏராளமான மின் கம்பங்களில் ஒட்டப்பட்டிருந்தது.
நவடா,
பீகாரின் நவடா மாவட்டத்துக்கு உட்பட்ட ராஜாலி தொகுதி ராஷ்ட்ரீய ஜனதாதள எம்.எல்.ஏ. பிரகாஷ் வீர். கடந்த 2005-ம் ஆண்டு தேர்தலில் இவரது போஸ்டர்கள் ஏராளமான மின் கம்பங்களில் ஒட்டப்பட்டிருந்தது.அந்த தேர்தலில் இவர் தோல்வியடைந்தாலும், அவர் மீது தேர்தல் நடத்தை விதி மீறல் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நவடா மாவட்டத்தில் உள்ள எம்.பி- எம்.எல்.ஏ. கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமார் அவினாஷ் வீர், எம்.எல்.ஏ. பிரகாஷ் வீருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்து நேற்று உத்தரவிட்டார். எனினும் மேல் முறையீட்டு ஜாமீன் பத்திரம் அளித்த பிரகாஷ் வீர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.தேர்தல் நடத்தை விதி மீறல் வழக்கில் எம்.எல்.ஏ. ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.