மாசுபாடற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் - மராட்டிய முதல்-மந்திரி

மாசுபாடற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-22 20:26 GMT

மும்பை,

மராட்டிய மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும், பருவநிலை மாற்றத்துறை சார்பில் நேற்று முன் தினம் தீபாவளி பண்டிகை தொடர்பாக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திரபட்னாவிஸ் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஏக்நாத் ஷிண்டே, கொரோனா கட்டுப்பாடுகள் தற்போது நிறைவடைந்துவிட்டதால் தீபாவளியை கொண்டாட மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், மாசுபாடற்ற தீபாவளியை கொண்டாடுவது நமது கடமை' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்