ஈஸ்டர் பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-31 05:21 GMT

புதுடெல்லி,

ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

"புதுப்பித்தலும், நல்லவற்றை எதிர்நோக்கிய நம்பிக்கையும் எல்லா இடங்களிலும் எதிரொலிக்கும் என்று நம்புகிறோம். ஒற்றுமையையும் அமைதியையும் வளர்க்கும் வகையில் இந்த நாள் நம் அனைவரும் ஒன்றுசேர்வதற்கு ஊக்கமளிக்கட்டும். அனைவருக்கும் மகிழ்ச்சியான ஈஸ்டர் வாழ்த்துக்கள்." என தெரிவித்துள்ளார். 

 

Tags:    

மேலும் செய்திகள்