அந்தமான், நிக்கோபார் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவானது.
போர்ட் பிளேர்,
வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மதியம் 12.43 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தமானின் போர்ட் பிளேர் நகரின் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ளதாகத் தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் போர்ட் பிளேயருக்கு 108 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை. அதேபோல பொருள் தேசம் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.