வங்க கடல் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம்

ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.;

Update:2023-11-07 06:39 IST

புதுடெல்லி,

வங்க கடல் பகுதியில் இன்று அதிகாலை 5.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

அந்தமான் மற்றும் நிகோபார் தீவை ஒட்டிய பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்