அடுத்த கூட்டத்தொடரின் போது கர்நாடக மேல்-சபை தலைவர் தேர்தல் நடத்தப்படும்

அடுத்த கூட்டத்தொடரின் போது கர்நாடக மேல்-சபை தலைவர் தேர்தல் நடத்தப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-24 21:47 GMT

பெங்களூரு: பெங்களூரு விதானசவுதாவில் கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் நடந்து முடிந்திருந்தது. இந்த கூட்டத்தொடரின் போது கர்நாடக மேல்-சபை தலைவர் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக மேல்-சபை தலைவர் பதவியை எதிர்பார்த்து பா.ஜனதாவின் மூத்த தலைவரான பசவராஜ் ஹொரட்டி காத்திருந்தார். ஆனால் பசவராஜ் ஹொரட்டிக்கு மீண்டும் மேல்-சபை தலைவர் பதவி வழங்குவதில் பா.ஜனதாவுக்குள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக, மழைக்கால கூட்டத்தொடரின் போது மேல்-சபை தலைவர் தேர்தல் நடத்தப்படாமல் இருந்ததாக தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், மழைக்கால கூட்டத்தொடரின் போது மேல்-சபை தலைவர் தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை உருவானது. அடுத்து நடைபெறும் கூட்டத்தொடரின் போது மேல்-சபை தலைவர் பதவிக்கு தோ்தல் நடத்தப்படும், என்றார். ஆனால் பசவராஜ் ஹொரட்டிக்கு மேல்-சபை தலைவர் பதவி வழங்குவது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எதுவும் தெரிவிக்கவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்