பாகிஸ்தானில் இருந்து டிரோன் மூலம் போதைப்பொருள் கடத்தல் - எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்

டிரோனை சோதனை செய்த போது, அதில் 2.622 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

Update: 2023-02-01 19:15 GMT

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் பாசில்கா மாவட்டத்தில் உள்ள முகம்பே என்ற கிராமத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே சந்தேகப்படும் வகையில் ஆளில்லா விமானம்(டிரோன்) பறந்து வருவதை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கண்டுபிடித்தனர்.

இரவு நேரம் என்பதால், டிரோன் பறந்து வரும் சத்தம் மற்றும் அதில் பொருத்தப்பட்டிருந்த சிறிய எலக்ட்ரானிக் பல்புகள் மூலம் டிரோனை கண்டுபிடித்த பாதுகாப்பு படை வீரர்கள், அதை நடுவானிலேயே சுட்டு வீழ்த்தினர். பின்னர் அந்த டிரோனை சோதனை செய்த போது, அதில் 2.622 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

அந்த டிரோன் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளது. மேலும் அந்த பகுதியை சோதனை செய்த போது, அங்குள்ள கோதுமை வயலில் 2.612 கிலோ எடை கொண்ட போதைப்பொருள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதுவும் டிரோன் மூலம் கடத்தி வரப்பட்டதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்