டெல்லியில் மாடியில் இருந்து குதித்து டாக்டர் தற்கொலை

டெல்லியில் டாக்டர் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-10-11 20:43 GMT

புதுடெல்லி,

டெல்லி மயூர்விகார் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் சைபல் முகோபாத்யாய். இவர் டெல்லியில் உள்ள ஜி.பி.பந்த் ஆஸ்பத்திரியில் இருதயவியல்துறை தலைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு சமீபத்தில் தோல் நோய் ஏற்பட்டது. இதன் மூலமும், வேறு சில காரணங்களாலும் அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அவர் தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றினார்கள். அவர் எழுதி வைத்திருந்த தற்கொலை குறிப்பையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அவருக்கு 56 வயது ஆகிறது. மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்