சித்தராமையா, டி.கே.சிவக்குமார் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்க கிரிக்கெட் பார்க்க சென்றார்களா?; குமாரசாமி கேள்வி
சித்தராமையா, டி.கே.சிவக்குமார் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்க கிரிக்கெட் பார்க்க சென்றார்களா? என்று குமாரசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
பெங்களூரு:
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த கிரிக்கெட் போட்டியை முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நேரில் சென்று பார்த்தனர். இதுகுறித்து குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இந்த சந்தர்ப்பத்திலும் 5 மணிநேரம் செலவழித்து சின்னசாமி மைதானத்திற்கு சென்று முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் மந்திரிகள் கிரிக்கெட் போட்டியை பார்த்துள்ளனர். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு ஆதரவு அளிக்க சென்றார்களா? அல்லது பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு அளிக்க சென்றார்களா?. இந்திய அணி விளையாடியிருந்தால் இந்தியாவுக்கு ஆதரவாக பார்க்க சென்றிருக்கலாம். ஆனால் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்க்க செல்ல வேண்டிய அவசியம் என்ன?.
இவ்வாறு அவர் கூறினார்.