கர்நாடகாவில் டெங்கு தொற்று நோயாக அறிவிப்பு

கர்நாடகா முழுவதும் 25 ஆயிரத்து 589 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2024-09-05 01:25 GMT

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் கடந்த இருமாதங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் 25 ஆயிரத்து 589 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், ''கர்நாடகாவில் டெங்கு காய்ச்சலை தொற்று நோயாக அறிவித்துள்ளது. வீடுகளில் சுகாதாரத்தை பேணாதவர்களிடம் அபராதம் விதிக்கும் வகையில் கர்நாடக தொற்று நோய் தடுப்பு சட்டம் திருத்தம் செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்