போதைப்பொருள் வாங்க பணம் தர மறுத்ததால் தந்தையை கொன்ற கொடூர மகன் கைது

போதைப்பொருள் வாங்க பணம் தர மறுத்ததால் தந்தையை கொன்ற கொடூர மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-02 10:27 GMT

புதுடெல்லி,

போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் தர மறுத்ததால் தந்தையை கொன்ற கொடூர மகனை போலீசார் கைது செய்தனர். வடமேற்கு டெல்லியின் ஷகுர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார். அவருக்கும் அவரது மகன் அஜய்க்கும் தகராறு ஏற்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்து காதிலிருந்து ரத்தம் கொட்டும் நிலையில் சுரேஷை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விசாரணையில் அவரது மகன் அவரிடம் போதை மருந்து வாங்குவதற்கு பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் அஜய் அவரை தாக்கியுள்ளார் என்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 (கொலை) கீழ் வழக்குப் பதிவு செய்து அஜய்யை போலீசார் கைது செய்தனர். மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்