கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு - டெல்லி அரசு அறிவிப்பு

டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Update: 2022-10-11 17:58 GMT

Image Courtacy: ANI

புதுடெல்லி,

டெல்லியில் பர்ஷ்கானா லஹோரி கேட் அருகில் உள்ள வால்மீகி மந்திர் அருகே கட்டிடம் இடிந்து விழுந்தது. இரண்டு மாடிக் கட்டிடமாக இருந்த அது பாழடைந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் அங்கு படுகாயங்களுடன் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சூழலில் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய 4 வயது சிறுமி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

இதன்படி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாயும், இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாயும் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்று டெல்லி அரசு இன்று அறிவித்துள்ளது. மேலும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 20,000 ரூபாயும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

முன்னதாக உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் இம்ரான் ஹூசைன், கட்டிடம் இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க மருத்துவமனைக்கு சென்றிருந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்