சித்தராமையா மீது மானநஷ்ட வழக்கு

லிங்காயத் சமுதாயம் பற்றி பேசிய சித்தராமையா மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்று சிவயோகி மடத்தினர் தெரிவித்துள்ளனர்.

Update: 2023-04-28 22:02 GMT

பெங்களூரு:-

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலையொட்டி பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். மேலும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, பசவராஜ் பொம்மையை விமர்சிக்கும்போது லிங்காயத் சமூகம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தெரிகிறது. இது லிங்காயத் சமூகம் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பா.ஜனதாவினரும் லிங்காயத் சமூகத்தினரும் சித்தராமையாவுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். தற்போது இது கர்நாடக அரசியலில் பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த சிவயோகி மடம் சார்பில் சித்தராமையவிற்கு கண்டனம் தெரிவித்ததுடன், அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளார். இது குறித்து அந்த மடத்தின் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சித்தராமையாவிற்கு ஆரம்ப காலத்தில் இருந்தே லிங்காயத் சமுதாய மக்களை பிடிக்காது. எங்கள் மீது வெறுப்பைத்தான் காட்டி வந்தார். அவர், ஊழல் முதல்-மந்திரி என்று கூறியிருக்கலாம். ஆனால் அவர் லிங்காயத் ஊழல் முதல்-மந்திரி என்று கூறியுள்ளார். இது ஒட்டுமொத்த லிங்காயத் சமுதாய மக்களையும் அவமதிக்கு செயல். சித்தராமையாவிற்கு எதிராக போராட்டம் நடத்த இருக்கிறோம். மேலும் கோர்ட்டில் அவர் மீது மானநஷ்ட தொடுக்க இருக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்