ஷிண்டே மகன் மீது குற்றம்சாட்டிய சஞ்சய் ராவத் மீது அவதூறு வழக்கு
தன்னை கொலை செய்ய ஏக்நாத் ஷிண்டே மகன் முயற்சி செய்வதாக குற்றம்சாட்டிய சஞ்சய் ராவத் மீது போலீசார் அவதூறு வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
தானே,
சிவசேனா உத்தவ் தாக்கரே தரப்பை சேர்ந்த எம்.பி. சஞ்சய் ராவத் கடந்த சில நாட்களுக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி. மீது பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். ஏக்நாத் ஷிண்டேவின் மகன் தன்னை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சி செய்வதாக அவர் குற்றம்சாட்டி இருந்தார். சஞ்சய் ராவத்தின் குற்றச்சாட்டை ஏக்நாத் ஷிண்டே தரப்பு மறுத்தது.
இந்தநிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேக்கு எதிராக அவதூறு பரப்பியதாக தானே முன்னாள் மேயர் மீனாட்சி ஷிண்டே கபுர்பாவ்டி போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் அவதூறு, இருதரப்பினர் இடையே மோதலை உருவாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சஞ்சய் ராவத் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.