திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ½ மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்த தரிசன டிக்கெட்டுகள்
ஏப்ரல் மற்றும் மே மாதத்துக்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் நேற்று மதியம் 2 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்பட்டன.
திருமலை,
திருமலை-திருப்பதி தேவஸ்தான இணைய தளத்தில் அடுத்த மாதத்துக்கான (மார்ச்) ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு அடிப்படையில் நேற்று காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டன. வெளியிட்ட ½ மணி நேரத்தில் அனைத்து ரூ.300 டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.
ஏப்ரல் மற்றும் மே மாதத்துக்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் நேற்று மதியம் 2 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்பட்டன. வெளியிட்ட ½ மணிநேரத்தில் அனைத்து டோக்கன்களும் முன்பதிவாகின.
அதேபோல் மார்ச் மாதத்துக்கு ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை, உற்சவ சேவைக்கான தரிசன டிக்கெட்டுகள் நேற்று மாலை 4 மணியளவில் வெளியிடப்பட்டன. அதில் பக்தர்கள் தங்களுக்கு தேவையான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.