அப்பா... இந்தியாவுக்கான உங்கள் கனவை நிறைவேற்றுவேன்: ராகுல் காந்தி உருக்கம்
உங்கள் நினைவுகளை என்னுடன் எடுத்துக் கொள்வேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-வது பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான வீரபூமிக்கு சென்ற ராகுல் காந்தி, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன், பிரியங்கா காந்தி, காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதன்பின்னர் ராஜீவ் காந்தி குறித்து, ராகுல் காந்தி உருக்கமாக எக்ஸ் தளப்பதிவில் பதிவிட்டிருப்பதாவது:-
"அப்பா நீங்கள் ஒரு இரக்கமுள்ள ஆளுமை, தோழமை உணர்வு மற்றும் நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணத்தின் அடையாளம். உங்கள் போதனைகள் எனக்கு உத்வேகம் அளிக்கிறது. இந்தியாவுக்கான உங்களுடைய கனவே என்னுடையது. உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன். உங்கள் நினைவுகளை என்னுடன் எடுத்துக் கொள்வேன்" என்று தெரிவித்துள்ளார்.