கியூட் நுழைவுத்தேர்வு: 10-ம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதிலிருந்து தமிழ்நாடு மாணவர்களுக்கு விலக்கு

கியூட் நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பத்தில் 10-ம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதிலிருந்து தமிழ்நாடு மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-02-17 13:05 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

மத்திய பல்கலைக்கழகங்களுக்கான கியூட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, தமிழ்நாட்டு மாணவர்கள் 10-ம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிட தேவையில்லை என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும் கியூட் நுழைவுத்தேர்வுக்கு, பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2021-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் இன்றி தேர்ச்சி வழங்கப்பட்டிருந்ததால், தமிழக மாணவர்கள் கியூட் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை குறிப்பிட வேண்டும் என்ற விதியை தளர்த்த கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் 2021-ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு மதிப்பெண்களைக் குறிப்பிடத் தேவையில்லை என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்