அரியானா: வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து - 5 குழந்தைகள் உள்பட 7 பேர் படுகாயம்
அரியானாவில் வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் சிக்கி 5 குழந்தைகள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
சண்டிகர்,
அரியானாவின் ரோக்தக்கில் உள்ள ஏக்தா காலனியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒரு தம்பதிகள் மற்றும் ஐந்து குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் இரண்டு மாடி வீடும் சேதமடைந்தது.
காயமடைந்த அனைவரும் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர், மேலும் படுகாயம் அடைந்த பெண் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.