கர்நாடகத்தில் புதிதாக 119 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 119 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2023-03-15 21:10 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் புதிதாக 119 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

119 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் நேற்று 3 ஆயிரத்து 465 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 119 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 78 பேருக்கும், கலபுரகியில் 10 பேருக்கும், சிவமொக்காவில் 14 பேருக்கும், மைசூருவில் 3 பேருக்கும், பல்லாரியில் 4 பேருக்கும், ஹாசனில் 3 பேருக்கும், உத்தரகன்னடா, கோலாரில் தலா 2 பேருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

பெங்களூருவில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது 560 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 3.43 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 100-ஐ தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுக்கூட்டங்கள்

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதே போல் கர்நாடகத்தில் வைரஸ் தொற்று ஏறுமுகத்தில் இருக்கிறது. இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அடுத்தடுத்து வரும் நாட்களில் பரிசோதனையை அதிகரித்தால், வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால், அரசியல் கட்சிகள் ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றுதிரட்டி பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால் கொரோனா பரவல் வேகமாக அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்