இந்தியாவில் 50-க்கும் கீழே வந்தது கொரோனா: தொற்றால் ஒருவர் பலி

தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 66 குறைந்தது.

Update: 2023-06-20 20:01 GMT

புதுடெல்லி,

நமது நாட்டில் கொரோனா தொற்று அதன் இறுதிக்கட்டத்தில் உள்ளது. நேற்று முன்தினம் தினசரி தொற்று பாதிப்பு 63 ஆக இருந்தது. நேற்று மேலும் குறைந்து 50-க்கு கீழே வந்தது. 24 மணி நேரத்தில் 36 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதுவரை தொற்றால் பாதிக்கப்ட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 93 ஆயிரத்து 579 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரு நாளில் 101 பேர் மீண்டனர். இதன் மூலம் தொற்றில் இருந்து மீண்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 59 ஆயிரத்து 838 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 66 குறைந்தது. இதனால் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,844 ஆக குறைந்தது.

தொற்றால் நேற்று முன்தினம் ஒருவர் பலியானார். நேற்றும் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து தொற்றால் இறந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 897 ஆக உயர்ந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்