கடன் வைத்துள்ள நிறுவனத்தில் முதலீடு-பாரத ஸ்டேட் வங்கி முடிவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

எஸ்பிஐ வங்கியின் முடிவு, ஆபத்தான முன்னுதாரணமாகி விடும் என்று காங்கிரஸ் எச்சரித்துள்ளது.

Update: 2024-09-24 20:43 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-சுப்ரீம் இன்ப்ராஸ்ட்ரக்சர் இண்டியா லிமிடெட் என்ற கார்ப்பரேட் நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கியிடம் பெற்ற கடனை இன்னும் திருப்பிச் செலுத்தவில்லை. திவால் ஆனதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், நிலுவையில் உள்ள அந்த கடனை அந்நிறுவனத்தில் சமபங்குகளாக மாற்றி முதலீடு செய்ய பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த முடிவு, ஆபத்தான முன்னுதாரணமாகி விடும்.

கடன்பட்ட இதர நிறுவனங்களும் இதே பேரத்தை பேச தொடங்கும். கடனாக கொடுத்த பொதுமக்கள் பணத்தை மீட்பதற்கு பதிலாக, சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது சரியல்ல. எனவே, ரிசர்வ் வங்கி உடனடியாக தலையிட்டு, பாரத ஸ்டேட் வங்கியின் முடிவு எடுக்கும் நடைமுறையை ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்