காங்கிரஸ் வேட்பாளர்கள் வீடுகளில் இன்று வருமானவரி சோதனை?

காங்கிரஸ் வேட்பாளர்கள் வீடுகளில் இன்று வருமானவரி சோதனை நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2023-04-04 21:04 GMT

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்த நிலையில் அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா நேற்றிரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வி பயத்தில் உள்ளது. அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், மேல்சபை உறுப்பினர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் 10 பேர் ராஜினாமா செய்து காங்கிரசில் சேர்ந்துள்ளனர். மேலும் கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று முடிவுகள் வந்துள்ளன. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத பா.ஜனதா மேலிட தலைவர்களும், பிரதமர் மோடியும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையை ஏவி நாளை (இன்று) கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களின் வீடுகளில் சோதனை நடத்த முடிவு செய்துள்ளது. இதை கண்டு நாங்கள் பயப்பட போவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்