மங்களூருவுக்கு வந்து உண்மையை பேசிவிட்டு செல்லுங்கள்; பிரதமர் மோடிக்கு சித்தராமையா வேண்டுகோள்

மங்களூருவுக்கு வந்து உண்மையை பேசிவிட்டு செல்லுங்கள் என்று பிரதமர் மோடிக்கு சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-08-25 20:31 GMT

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி, கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, 2022-ம் ஆண்டுக்குள் வீடற்ற மக்களுக்கு வீடு கட்டி வழங்கப்படும், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, அனைத்து வீடுகளுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். இந்த திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டதா?. மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் பல்வேறு குடிநீர் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. ஆனால் பிரதமர் மோடி அரசு வந்த பிறகு அந்த திட்டங்களின் பெயரை ஜல் ஜீவன் திட்டம் என்று மாற்றியுள்ளது.

நாட்டில் பா.ஜனதா ஆட்சியில் 10 கோடி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பொய் கூறியுள்ளார். வரலாறு எப்போதும் உண்மையாக இருக்கும். அவர் மங்களூரு வரவுள்ளார், வாருங்கள். ஆனால் பொய் பேச வேண்டாம். உண்மையை மட்டும் பேசிவிட்டு செல்லுங்கள்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்