கல்லூரி மாணவி தற்கொலையில்பரபரப்பு தகவல்கள்

பெங்களூருவில் 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட மாணவி, ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.

Update: 2023-02-28 05:15 GMT

பெங்களூரு-

மாணவி தற்கொலை

பெங்களூரு சஞ்ஜய்நகர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் கவுசிக். சாப்ட்வேர் என்ஜினீயர். இவரது மனைவி தேஜூ. இந்த தம்பதியின் மகள் பிரக்ருதி (வயது 18). இவர் தனியார் பி.யூ. கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவி கல்லூரிக்கு சென்றுள்ளார். அன்று விடுமுறை என்பதால் கல்லூரி காவலாளி, அவரை வீட்டிற்கு செல்லுமாறு கூறி உள்ளார்.

அதையடுத்து அவர் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றார். அங்கு 10-வது மாடிக்கு சென்ற   பிரக்ருதி அங்கிருந்து திடீரென கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஐகிரவுண்ட் ேபாலீசார் விரைந்து வந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

2 முறை தற்கொலை முயற்சி

விசாரணையில் கடந்த சில நாட்களாக மாணவி மனமுடைந்து காணப்பட்டதாகவும், இதற்கு முன்பு 2 முறை மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. சம்பவத்தன்று மாணவி, தனது பெற்றோருடன் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது கோபித்து கொண்டு வெளியே சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. கோபம் தணிந்தவுடன்     பிரக்ருதி வீட்டிற்கு வந்துவிடுவாள் என அவரது பெற்றோர் நினைத்துள்ளனர்.   இதற்கிடையே மாணவி, தனது தோழியை பார்க்க செல்வதாக கூறிவிட்டு குடியிருப்பு உள்ளே நுழைந்து 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்