சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களின் விவரங்கள் சேகரிப்பு; போலீஸ் கமிஷனர் சசிகுமார் பேட்டி

மங்களூரு நகரில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-05 15:32 GMT

மங்களூரு;

சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களின்...

கர்நாடக கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவில் அடிக்கடி இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், மங்களூரு நகரில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் பற்றி விவரங்களை சேகரிக்கும்படி மாநகர போலீசாருக்கு உள்துறை மந்திரி அரக ஞானேந்திரா உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி மாநகர போலீசார், சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களின் விவரங்களை சேகரித்து வருகிறார்கள். இதுகுறித்து மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உள்துறை மந்திரி உத்தரவு

மங்களூருவில் சட்டவிரோதமாக தங்கி உள்ளவர்களை கண்காணிக்கும்படி உள்துறை மந்திரி அரக ஞானேந்திரா உத்தரவிட்டிருந்தார். அதன்படி வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்து சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வேலைக்காக தங்கி உள்ளனர். பல்வேறு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களிடம் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

518 பேர்

நாங்கள் 4 ஆயிரம் தொழிலாளர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் விவரங்கள் சேகரித்தோம். அவர்களில் 518 பேர் ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். அவர்களுக்கு வங்காளதேசம் உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்களுடன் தொடர்பு உள்ளதா? வேறு எந்த அமைப்புடனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்