டெல்லி போலீஸ் அதிகாரி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி - முதல்-மந்திரி கெஜ்ரிவால் அறிவிப்பு

செல்போன் திருடனால் கொல்லப்பட்ட டெல்லி போலீஸ் அதிகாரி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

Update: 2023-01-11 19:19 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

டெல்லி மாயாபுரி போலீஸ் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் ஷம்பு தயாள்.

கடந்த 4-ந் தேதி இந்த போலீஸ் நிலையத்துக்கு வந்த ஒரு பெண், தனது கணவரின் செல்போனை ஒருவர் பறித்துவிட்டதாக புகார் கூறினார்.

அதையடுத்து அந்த இடத்துக்கு சென்ற உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஷம்பு தயாள், செல்போன் திருடரை மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்ல முயன்றார்.

அப்போது அந்த நபர், ஷம்பு தயாளை கத்தியால் சரமாரியாக தாக்கினார். அதில் படுகாயமடைந்த அவர், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

தொடர்ந்து கத்தியால் குத்தப்பட்டபோதும் செல்போன் திருடரை ஷம்பு தயாள் விடாமல் மடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பானது.

இந்நிலையில், கொல்லப்பட்ட உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஷம்பு தயாளின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்குவதாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார்.

மேலும், தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் திருடரைப் பிடிக்க போராடி வீரமரணம் அடைந்த ஷம்பு தயாள் குறித்து ஒட்டுமொத்த நாடும் பெருமைப்படுவதாக டுவிட்டரில் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்