சோனியா காந்தி விரைவாக குணம் அடைய சித்தராமையா வாழ்த்து
சோனியா காந்தி விரைவாக குணம் அடைய சித்தராமையா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி டெல்லியில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். அவர் விரைவாக குணம் அடைந்து நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.