பெங்களூருவில் மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்

பெங்களூருவில் மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றப்பட்டுள்ளது.

Update: 2022-08-06 16:30 GMT

பெங்களூரு: பெங்களூருவில் நாகசந்திரா முதல் அஞ்சனாபுரா வரையிலும், பையப்பனஹள்ளியில் இருந்து கெங்கேரி வரையிலும் 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி காலை 5 மணிக்கு மெட்ரோ ரெயில்களின் இயக்கம் தொடங்கப்படுகிறது. காலையில் பயணிகளின் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதால் அதிகாலை 5 மணி முதல் காலை 6 மணி வரையும், இரவு 10 மணி முதல் இரவு 11 மணி வரையும் 2 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் என்ற வீதத்தில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பயணிகளின் கோரிக்கையை ஏற்று இந்த இடைவெளி குறைக்கப்பட்டு காலை ஒரு மணி நேரம் அதாவது காலை 5 மணி முதல் காலை 6 மணி வரையும், இரவு 10 முதல் இரவு 11 மணி வரையும் 20 நிமிடங்களுக்கு பதிலாக 15 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் இயக்கப்படும் என்றும், இந்த புதிய திட்டம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வரும் என்றும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்